Fri. Mar 29th, 2024

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. இன்று நடந்த போட்டியில் போலந்து அணியும் பிரான்ஸ் அணியும் இன்று மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி வீரர் ஒலிவியர் ஜிரூட் 44 வது நிமிடத்தில் கோல் அடித்தார். பிரான்ஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி வீரர் கைலியன் ம்பாப்பே 74 மற்றும் 90+1 நிமிடத்தில் தன பங்குக்கு இரண்டு கோல் அடித்தார். கடைசி ஆட்ட நேர முடிவில் போலந்து அணி வீரர் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி 90+9 நிமிடத்தில் கோல் அடித்தார்.

முடிவில் பிரான்ஸ் அணி 3-1 என்ற கணக்கில் போலந்து அணியை தோற்கடித்தது.

Visits: 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *