Sat. Feb 4th, 2023

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் G ல் இடம்பெற்ற பிரேசில் அணியும் கேமெரூன் அணியும் லுஸைல் மைதானத்தில் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இரண்டாம் பாதி ஆட்டத்தில் கேமெரூன் அணி வீரர் வின்சென்ட் அபூபக்கர் 90+2 நிமிடத்தில் கோல் அடித்து பிரேசில் அணிக்கு அதிர்ச்சி தந்தார்.

ஆட்ட நேர முடிவில் கேமெரூன் அணி 1-0 என்ற கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தியது.

Hits: 6

Leave a Reply

Your email address will not be published.