Wed. May 29th, 2024

தமிழக வாழ்வுரிமைகள் கட்சி தலைவர் தி.வேல்முருகன்.எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “கல்வியிலும், சமூகத்திலும் நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டு வாய்ப்புகள் மறுக்கப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளித்து, சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டது தான் இட ஒதுக்கீடு.

அந்த வகையில், ஒடுக்கப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – பழங்குடியின மக்கள், அவர்களது மக்கள் தொகை விழுக்காட்டிற்கு ஏற்ப கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடம் பெறவில்லை என்பதை ஆராய்ந்து, அதற்குரிய கணக்கீடுகளின்படியே அப்பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

ஆனால், நாட்டின் மிக உயர்ந்த கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்பக் கழகத்தில், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பணி நியமன மற்றும் உயர்கல்விக்கான இட ஒதுக்கீட்டு உரிமையை பறித்திருப்பது, தகவல் உரிமை சட்டத்தின் வாயிலாக அம்பலப்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னை ஐஐடியில், மொத்தம் 619 பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களில் 514 பேர் உயர்சாதியினராக இருந்து வருகிறார்கள். அதாவது சென்னை ஐஐடியில் பணிபுரியும் பேராசிரியர்களில் 83 விழுக்காட்டினர் உயர்சாதியை சேர்ந்தவர்களாக மட்டுமே இருக்கின்றனர்.”

Views: 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *