Tue. Apr 16th, 2024

பாகிஸ்தான் சுற்றுப்பயணம் சென்றுள்ள இங்கிலாந்து அணி இன்று முதல் டெஸ்ட் போட்டியை ராவல்பிண்டியில் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்க வீரர்கள் சாக் கிராலி, பென் டக்கெட் இணைந்து அதிரடியாக விளையாடி அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். சாக் கிராலி 122 ரன்களிலும், பென் டக்கெட் 107 ரன்களிலும் அவுட் ஆகினர். அவர்கள் பின் களமிறங்கிய ஒல்லி போப் தனது பங்குக்கு 100 ரன்களை அடித்தார். ஜோ ரூட் 23 ரங்களில் அவுட் ஆனார். அவர்கள் பின் வந்த ஹாரி புரூக் 101 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 34 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 75 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 506 ரன்களை குவித்துள்ளது.

இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணியில் விக்கெட்டுகள் வரிசையாக விழுந்து 657 ரன்கள் மட்டும் எடுத்தது. சாஹித் மஹ்மூத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷபீக்
இமாம்-உல்-ஹக் இருவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இரண்டாம் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 181 ரன்கள் எடுத்துள்ளது. அப்துல்லா ஷபீக் 89 ரன்களுடனும், இமாம்-உல்-ஹக் 90 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Visits: 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *