Wed. May 29th, 2024

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின் வலுதூக்கும் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை பகுதியைச் சேர்ந்த செல்வி.லோகப்பிரியாவை மனதாரப் பாராட்டுகிறேன்.

இத்தகைய வெற்றியை லோகப்பிரியா பெற்ற நேரத்தில் அவரது தந்தையை இழந்திருப்பது வருத்தமளிக்கிறது. இந்த இழப்பிலிருந்து மீண்டுவருவதற்கான மனவலிமையை அவரும், அவரது குடும்பத்தினரும் பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

இந்த இழப்பினால் மனம் சோர்ந்துவிடாமல் தான் சார்ந்திருக்கும் விளையாட்டில் மேலும் பல சாதனைகளை லோகப்பிரியா படைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.”

Views: 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *