Thu. Apr 25th, 2024

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் H இல் இடம்பெற்ற கொரியா ரிபப்ளிக் அணியும் போர்ச்சுக்கல் அணியும் இன்று மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணி வீரர் 5 வது நிமிடத்தில் ரிக்கார்டோ ஹோர்டா கோல் அடித்தார். கொரியா ரிபப்ளிக் அணி வீரர் கிம் யங் குவான் 27 வது நிமிடத்தில் கோல் அடித்து முதல் பாதி ஆட்டத்தை சமன் செய்தார்.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் கொரியா அணி வீரர் ஹ்வாங் ஹீ சான் 90+1 வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

முடிவில் கொரியா ரிபப்ளிக் அணி 2-1 என்ற கணக்கில் போர்ச்சுக்கல் அணியை தோற்கடித்தது.

Visits: 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *