Tue. Apr 23rd, 2024

சென்னை : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வெளியிட்ட செய்தி குறிப்பு “மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையின்படி மாணவர்களின் தமிழ்மொழி ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக தமிழ்மொழி இலக்கியத் திறனறித்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு கடந்த 15-ஆம் தேதி நடத்தப்பட்டது.

2,50,731 மாணவர்கள் பங்கேற்ற இத்தேர்வு முடிவுகளை மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுடன் இணைந்து வெளியிட்டோம்!

தேர்ந்தெடுக்கப்பட்ட 1500 மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1500 இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

தேர்வெழுதிய மாணவர்கள் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.” என கூறியுள்ளார்.

Visits: 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *