Tue. Apr 23rd, 2024

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாட உள்ளது.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்று முதல் டெஸ்ட் பெர்த் மைதானத்தில் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதல் இன்னிங்க்சில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 5 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். வார்னருடன் களமிறங்கிய இன்னொரு தொடக்க வீரர் கவாஜா 65 ரன்கள் அடித்து அவுட் ஆனார். அதற்கு பின் களமிறங்கிய லபுஸ்கேன், ஸ்டீவன் ஸ்மித் ஜோடி அட்டகாசமாக பொறுமையாக விளையாடினர். லபுஸ்கேன் 204 ரன்களில் அவுட் ஆக அவர் பின் வந்த ஹெட் தன் பங்குக்கு 99 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா அணி 152.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 598 ரன்கள் எடுத்தபோது டிக்ளர் செய்தது. ஸ்டீவன் ஸ்மித் 200 ரன்கள் அடித்து அவுட் ஆகாமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் பிராத்வைட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 25 ஓவர்களில் 74 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் க்ரைக் பிராத்வைட் 18 ரன்களுடனும் , டேகனரின் சந்தர்பால் 47 ரன்களுடனும் இருவரும் விளையாடி வருகின்றனர்.

Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *