கத்தாரில் நடைபெற்றுவரும் கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் B ல் இடம்பெற்ற ஈரான் அணியும் யுனைடெட் ஸ்டேட்ஸ் அணியும் அல் துமாமா மைதானத்தில் மோதின.
முதல் பாதி ஆட்டத்தில் யுனைடெட் ஸ்டேட்ஸ் அணி வீரர் கிறிஸ்டியன் புலிசிக் 38 வது நிமிடத்தில் அணிக்காக முதல் கோலை அடித்தார்.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.
முடிவில் யுனைடெட் ஸ்டேட்ஸ் அணி 1-0 என்ற கணக்கில் ஈரான் அணியை வென்றது.
Visits: 1