Tue. Mar 19th, 2024

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் A ல் இடம்பெற்ற கத்தார் அணியும் நெதர்லாந்து அணியும் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணி வீரர் கோடி காக்போ 26 வது நிமிடத்தில் கோல் அடித்தார்.இதன் மூலம் நெதர்லாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணி வீரர் 49 வது நிமிடத்தில் ஃப்ரென்கி டி ஜாங் கோல் அடித்து அசத்தினார்.

இறுதியில் நெதர்லாந்து அணி 2-0 என்ற கணக்கில் கத்தார் அணியை வென்றது.

Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *