Fri. Jun 21st, 2024

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் H யில் இடம்பெற்ற கொரியா ரிபப்ளிக் அணியும் கானா அணியும் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் கானா அணி வீரர் முகமது சாலிசு 24 வது நிமிடத்திலும், குடுஸ் முகமது 34 வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். முதல் பாதி ஆட்டம் 2-0 என்ற கணக்கில் கானா அணி முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் கொரியா ரிபப்ளிக் அணி வீரர் சோ குசுங் 58வது நிமிடத்திலும்,61 வது நிமிடத்திலும் இரண்டு கோல் அடித்து அசத்தினார். கானா அணி வீரர் குடுஸ் முகமது 68 வது நிமிடத்தில் அணிக்காக தனது இரண்டாவது கோலை அடித்தார்.

இறுதியில் கானா அணி 3-2 என்ற கணக்கில் கொரியா ரிபப்ளிக் அணியை வீழ்த்தியது.

Views: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *