Wed. Feb 28th, 2024

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் F யில் இடம்பெற்ற குரோஷியா அணியும் கனடா அணியும் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் கனடா அணியின் அல்போன்சோ டேவிஸ் 2 வது நிமிடத்திலேயே கோல் அடித்து அசத்தினார். குரோஷியா அணி பதிலடியாக 36 வது நிமிடத்தில் ஆண்ட்ரேஜ் கிராமரிக் கோல் அடிக்க 44 வது நிமிடத்தில் மார்கோ லிவாஜா கோல் அடித்தார். முதல் பாதி ஆட்டத்தில் குரோஷியா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் குரோஷியா அணி வீரர் ஆண்ட்ரேஜ் கிராமரிக் 70 வது நிமிடத்தில் தனது இரண்டாவது கோல் அடிக்க , 90+4 நிமிடத்தில் லூரோ மேஜர் கோல் அடித்து அசத்தினர்.

முடிவில் குரோஷியா அமி 4-1 என்ற கணக்கில் கனடா அணியை வென்றது.

Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *