Wed. May 29th, 2024

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் G யில் இடம்பெற்ற கேமெரூன் அணியும் செர்பியா அணியும் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் கேமெரூன் அணி வீரர் ஜீன்-சார்லஸ் காஸ்டெல்லெட்டோ 29 வது நிமிடத்தில் கோல் அடிக்க செர்பியா அணியில் பதிலடியாக ஸ்ட்ரின்ஜா பாவ்லோவிக் 45+1 நிமிடத்திலும், செர்ஜ் மிலிங்கோவிக்-சாவிக் 45+3 வது நிமிடத்திலும் கோல் அடித்து அணியை முதல் பாதியில் 2-1 என ஆட்டம் முடிந்தது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் செர்பியா அணியின் அலெக்ஸாண்டர் மிட்ரோவிக் 53 வது நிமிடத்தில் கோல் அடிக்க பதிலடியாக கேமெரூன் அணியின் வின்சென்ட் அபுபக்கர் 63 வது நிமிடத்திலும், எரிக் மாக்சிம் சௌபோ-மோட்டிங் 66 நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.

இறுதியில் ஆட்ட ம் 3-3 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

Views: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *