Tue. Apr 23rd, 2024

சென்னை : தமிழக வாழ்வுரிமைகள் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்து வாழ்க்கையையும், உயிரையும் இழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.புள்ளி விபரப்படி,தினமும் 1 லட்சம் பேர் புதிதாக இதற்கு அடிமையாகிறார்கள்.

ஆன்லைன் சூதாட்டம் என்பது மிகப்பெருமளவில் இளைஞர்களையும், மாணவர்களையும் அடிமையாக்குவதோடு, அவர்களை தவறு செய்யத் தூண்டுவதோடு, தற்கொலையை நோக்கியும் தள்ளுகிறது.

இதனை புரிந்துக்கொண்ட தமிழ்நாடு அரசு, ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்ட மசோதா 2022′-ஐ சட்டசபையில் தாக்கல் செய்து, நிறைவேற்றி, ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக கடந்த மாதம் 28ஆம் தேதி, அனுப்பி வைத்தது.

இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் உடனடி ஒப்புதல் தந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது அலட்சியம் காரணமாக, ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்ட மசோதா 2022 காலாவதியாகி விட்டது.

எதிர்கால இளைஞர், மாணவர் சமுதாய நலனை கவனத்தில் கொள்ளாமல், ஆளுநரின் இத்தகைய போக்கு, ஆன்லைன் சூதாட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபவெறிக்கு துணை போகிறாரோ என்ற சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.”

Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *