சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை “(1) தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை திரட்டுவதை பா.ஜ.க., ஆட்சி அதிகாரத்தின் மூலம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகிறது. இதன்மூலம் தேர்தல்கள் சமநிலைத்தன்மை இல்லாமல் பெருத்த நிதி ஆதாரங்களோடு பா.ஜ.க.வுக்கு கூடுதலான வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது.
(2) ஏழு அரசியல் கட்சிகளின் நன்கொடை வருவாய் ரூபாய் 1398 கோடி எனக் குறிப்பிட்டு, அதில் பா.ஜ.க.வுக்கு மட்டும் ரூபாய் 1038 கோடி வழங்கப்பட்டிருக்கிறது. இதில், 989 கோடி ரூபாய் கார்ப்பரேட் நிறுவனங்களின் நன்கொடையாக மட்டுமே பெறப்பட்டுள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கிய மொத்த நன்கொடையில் 73.5 சதவிகிதம் பா.ஜ.க.வுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
(3) அரசமைப்புச் சட்டம் உருவாக்கிய தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களையும் பா.ஜ.க. அரசு தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதன் மூலம் இந்தியாவில் ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
(4) ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தின் வெற்றியின் மூலமே மோடியின் தலைமையிலான சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுகட்டப்படும் என்ற சூழல் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.
இந்திய ஒற்றுமை பயணத்திற்கு மக்களிடையே கிடைத்து வருகிற பேராதரவின் மூலம் மோடி ஆட்சி அகற்றப்படுவது உறுதி செய்யப்பட்டு வருகிறது.”
Hits: 1