Wed. Feb 21st, 2024

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் D யில் இடம்பெற்ற தரவரிசையில் 30 வது இடத்தில் உள்ள துனிசியா அணியும், 38 வது இடத்தில உள்ள ஆஸ்திரேலியா அணியும் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி வீரர் மிட்ச் டுய்க் 23 வது நிமிடத்தில் கோல் அடித்து அணியை முன்னிலை பெற வைத்தார். இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை.

முடிவில் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் துனிசியா அணியை வென்றது.

Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *