Sat. Nov 26th, 2022

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 02.07.2022 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் குறித்த போலியான பட்டியல் (Fake List) சமூக வலைதளங்களில் பரவி வருவதாக தெரியவருகிறது. இதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என தேர்வாணையம் கேட்டுக்கொள்கிறது.

தேர்வாணையத்தின் அனைத்து தேர்வு முடிவுகளும் தேர்வாணைய இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். அதனை www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளுமாறும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இது போன்ற பொய்யான தகவல்களை பரப்புபவர்களின் மீது கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தேர்வாணையத்தின் தெரிவுகள் அனைத்தும் விண்ணப்பதாரர்களின் தரவரிசைப்படியே மேற்கொள்ளப்படுகின்றன. பொய்யான வாக்குறுதிகளைக் கூறி, சட்டத்திற்கு புறம்பாக வேலை வாங்கித்தருவதாகக் கூறும் இடைத்தரகர்களிடம் விண்ணப்பத்தாரர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகின்றனர்.”

Hits: 6

Leave a Reply

Your email address will not be published.