Sat. Nov 26th, 2022

சென்னை: தமிழக வாழ்வுரிமைகள் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “இந்தோனிஷியாவில் குமரி மீனவர் மரணம் தொடர்பான விவகாரத்தில், சர்வதேச நீதிமன்றத்தில் வழங்குப்பதிவு செய்ய, தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி,குமரி மீனவ சகோதரர்கள் 8 பேர் மீன்பிடிக்க சென்றனர்.அவர்கள சென்ற படகு கடல் எல்லையை தாண்டி இந்தோனேஷியா கடல் பரப்பு பகுதிக்கு சென்றுவிட்டதாக, கடற்படையால் 8 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

அடுத்த சில நாட்களில் நான்கு மீனவர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டனர்
எஞ்சிய மீனவ சகோதரர்கள் தூத்தூரை சேர்ந்த மரிய ஜெசின் தாஸ்,பூத்துறையை சேர்ந்த இம்மானுவேல்,வெட்டுதுறையை சேர்ந்த சிவனின்,மன்னாட்டு பகுதியை சேர்ந்த ஜோமோன் ஆகிய நான்கு பேரும் ஒருவர் பின் ஒருவராக உடல் நிலை பாதிக்கப்பட்டனர்.

குறிப்பாக, மரியஜெசின் தாஸ் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவர் திடீரென மே 20ஆம் தேதி மரணமடைந்தார்.

சமீபத்தில், மருத்துவமனை நிர்வாகம் வழங்கிய உடற்கூராய்வு அறிக்கையில், மீனவ சகோதரர் மரியஜெசின் தாசின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இவ்விவகாரத்தில், சர்வதேச நீதிமன்றத்தில் வழங்குப்பதிவு செய்ய, தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.”

Hits: 0

Leave a Reply

Your email address will not be published.