Fri. Apr 19th, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பகலவன்.,இ.கா.ப அவர்கள் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை, சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வரையன்மலை வட்டம், சேரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 1)சந்தோஷ்குமார்(25) த/பெ முரளி மற்றும் 2)கார்த்தி@சைலோகார்த்தி(24) த/பெ தீர்த்தன் என்பவர்கள் சேரப்பட்டு அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் போது கையும் களவுமாக கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கபிரிவு காவல் துறையினறால் கைது செய்யப்பட்டார் அப்போது அவர்களிடம் இருந்து 120 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. இவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கள்ளச்சாரயம் விற்பனை செய்யும் குற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இவர்கள் மீது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கடத்திய மற்றும் விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர்கள் தொடர்ந்து இதுபோன்று மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் இவர்களை நடவடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்ததின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திரு. ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப அவர்கள் மேற்படி நபர்களை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி இன்று சந்தோஷ்குமார் மற்றும் கார்த்தி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *