Mon. Dec 4th, 2023

1999 இல் டாக்டர் ஜெரோம் டீலக்சிங் என்னும் வரலாற்று ஆசிரியர் அவரது தந்தையின் பிறந்தநாளான நவம்பர் 19 ஐ சர்வேதேச ஆண்கள் தினமாக கொண்டாடலாம், அன்றைய தினத்தில் ஆண்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலோ கஷ்டங்கள் இருந்தாலோ அதை பற்றிய விழிப்புணர்வு கொண்டு வரலாம் என சும்மா ஆரம்பித்தது தான் இந்த சர்வதேச ஆண்கள் தினம். அது சிறிது சிறிதாக உலகத்தின் கவனத்தை பெற்று இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு theme வைத்து ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வருடத்திற்கான theme “Helping men and boys”.

அதாவது ஒரு தந்தையாக, சகோதரனாக, கணவனாக, மகனாக குடும்பத்திற்கும் இந்த சமூகத்திற்கும் ஆண்கள் அளிக்கும் பங்களிப்பை, அவர்களது positive contribution களை கௌவரப்படுத்தும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த particular பிரச்சனையை முன்னிட்டு, இதை தீர்க்க என்று இந்த நாள் துவங்கவில்லை.

‘உனக்கு ஏதாவது பிரச்சனை இருந்தா சொல்லு, சரி பண்ணுவோம்’ என்பதாக இந்நாள் இருக்கிறது. அதனால் தான் ‘ஏதாவது பிரச்சனை இருந்தா சொல்லுங்க’ என்னும்போது, ‘ஒன்னும் பெரிய பிரச்னை எதுவும் இல்லையே’, ‘அப்படியா? ரைட்டு!’ என்று ஆண்கள் தினம் பெரிதாக கொண்டாடப்படுவதில்லை.

                                               - ஸ்வாதிகா சாரா(@swathikasarah)

Hits: 42

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *