Sun. Jun 23rd, 2024

குஜராத் : குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக களமிறங்கிய சம்யுக்த் கிஷான் மோர்ச்சா(எஸ்கேஎம்) என்ற விவசாய அமைப்பு களமிறங்கியதால் தேர்தல் சூடுபிடித்துள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அவர்கள் குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்துள்ளார். இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது. டிசம்பர் 1ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவும், டிசம்பர் 5ம் தேதி இரண்டாம் வாக்குப்பதிவும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் பணி டிசம்பர் 8ம் தேதி நடைபெறுகிறது.

சம்யுக்த் கிஷான் மோர்ச்சா(எஸ்கேஎம்) என்ற விவசாய அமைப்பு கூறியதாவது “எங்கள் அமைப்பு சார்பில் யாரும் தேர்தலில் போட்டியிடவில்லை. இருப்பினும் அரசியல் கட்சிகளை பார்த்து கேள்வி கேட்க வேண்டும் என மக்களிடம் பிரச்சாரம் செய்ய உள்ளோம். பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய உள்ளோம்.

டெல்லி விவசாய போராட்டத்தின் போது பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றியதாக கூறிய பாஜக அவர்கள் அதனை செய்யவில்லை. விவசாயிகளின் போராட்டங்களை வாபஸ் பெறுவதற்கு முன்பு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என பிரச்சாரத்தின் மூலம் எடுத்துக் கூற உள்ளோம். மேலும் விரிவான பயிர் காப்பீடு திட்டம், அனைத்து சிறு,குறு விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் 5000 ஓய்வூதியம் வழங்கவும், போராட்டத்தின் போது விவசாயிகள் மீது போடப்பட்ட சுமார் 46 ஆயிரம் வாக்குகளை திரும்ப பெறுதல் மற்றும் போராட்டத்தின் போது மரணமடைந்த அனைத்து விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்த உள்ளோம்.

மேலும் விவசாய கடன், பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான அறிவிப்பை கூறும் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் வலியுறுத்த உள்ளோம். நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகை முற்றுகை இடவும், ஜனாதிபதி திரௌபதிமுர்முவிடம் மனு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

லக்கிம்பூர் கெரி சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டெனியை பதவி நீக்கம் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

இந்த விவசாய அமைப்பானது டெல்லியில் நடந்த விவசாய அமைப்பு போராட்டத்தில் முக்கிய பங்காற்றியது.

குஜராத்தில் காங்கிரஸ்,ஆம் ஆத்மி, பாஜக இடையே கடமையான போட்டி நடந்து வரும் சூழலில் விவசாய அமைப்பின் அறிவிப்பு பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

Views: 16

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *