ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் குஜராத் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார். பிரசாரத்தின் போது நியூஸ் நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்த அமித்ஷா நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்றும் கூறியுள்ளார்.
குஜராத் சட்டமன்ற தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் அமித்ஷா அவர்கள் குஜராத்தில் பெரும்பான்மை இடங்களை பாஜக பிடிக்கும் என்று கூறியுள்ளார். ராமர் கோயில், 370 பிரிவு ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை தாங்கள் நிறைவேற்றி விட்டதாகவும் மேலும் மக்களுக்கு அதிகாரம் வழங்குவதே எங்களது குறிக்கோள் என்றும் கூறியுள்ளார்.
Hits: 10