Thu. Mar 28th, 2024

சென்னை: மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் இளம் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்தார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் இளம் கால்பந்து வீராங்கனை செல்வி.பிரியா மரணமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்துவதோடு உயிரிழந்த வீராங்கனையின் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

இத்தகைய மன்னிக்க முடியாத தவறுகள் எதிர்காலத்தில் நிகழாதவாறு தடுப்பதற்குரிய நடவடிக்கைகளையும் அரசு எடுத்திட வேண்டும். “

Visits: 27

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *