Wed. May 29th, 2024

சென்னை : நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி “தெலுங்கு திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டாரும் பழம்பெரும் நடிகரும் , நடிகர் மகேஷ் பாபு தந்தையுமான திரு. கிருஷ்ணா அவர்கள், இன்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயரமுற்றேன். திரு கிருஷ்ணா அவர்கள் என் மீது அளவற்ற அன்பும் நட்பும் செலுத்தியவர்.

350 படங்களுக்கு மேல் நடித்துள்ள, திரு. கிருஷ்ணா அவர்கள் நல்ல மனிதர் மற்றும் மிகச்சிறந்த நடிகர். அவரது இழப்பு திரைப்பட உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவரது மகன் திரு. மகேஷ் பாபு , உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவரது ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.”

Views: 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *