Thu. Dec 1st, 2022

சென்னை : அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், அர்ஜுனா விருது பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த சதுரங்கவீரர் ஆர்.பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடும் வீராங்கணை இளவேனில் வளரிவன் உள்ளிட்ட விருது பெற்றுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

அனைவரும், வருங்காலங்களில் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று, உயரிய விருதுகளைப் பெற்று, இந்திய நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க எனது நல்வாழ்த்துகள்!”

Hits: 20

Leave a Reply

Your email address will not be published.