Wed. Feb 28th, 2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அந்த வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இன்று (14.11.2022) மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

மேலும் கடும் மழையினால் சேதமடைந்துள்ள பயிர்கள் முறையாக கணக்கெடுப்பு செய்யப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Visits: 11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *