Tue. Apr 23rd, 2024

சென்னை: உச்சநீதிமன்றம் OC பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடுக்கு தடை இல்லை என தீர்ப்பு கூறியிருந்தது. இந்த தீர்ப்பானது இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்துக்கு குறைவாகத்தான் இருக்க வேண்டும் என்ற அடிப்படையை உடைத்துள்ளது.

இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “மண்டல் பரிந்துரை நடைமுறைக்கு வந்தபின் சங்பரிவார்கள் நடத்திய வன்முறை வெறியாட்டங்களின் பரிணாம வளர்ச்சிதான் EWS. இது OBC மக்களுக்கு எதிரான தாக்குதல்

இடஒதுக்கீட்டுக்கான வரம்பு 50% என்பதை உச்சநீதிமன்றதீர்ப்பு தகர்த்துள்ளது. OBC, SC ST இடஒதுக்கீட்டை உயர்த்த தமிழக அரசு முன்வரவேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.

Visits: 47

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *