Fri. Apr 19th, 2024

ஐசிசி டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் அணியும் மெல்போர்ன் மைதானத்தில் இன்று மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பாபர் அசாம் 32 (28) ரன்களும், சதாப் கான் 20 (14) ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் சாம் கரன் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் 52 (49) அடித்து கடைசிவரை களத்தில் நின்று அணியை வெற்றி பெற வைத்தார். 18.4 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டி20 உலகக்கோப்பையை இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

Visits: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *