Sat. Apr 20th, 2024

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி. நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டியில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர்களில் இரண்டு முறை அதிக ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

விராத் கோஹ்லி நடந்து முடிந்த 2022ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர் பட்டியலில் கோலி முதலிடத்தில் உள்ளார். இந்த உலகக்கோப்பையில் 6 போட்டிகளில் 296 ரன்கள் 98.66 சராசரியில் அடித்துள்ளார். இதில் நான்கு அரைசதங்கள் அடக்கம்.மேலும் இவரது அதிகபட்ச ரன் 82*.

இதேபோல் 2014ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். 6 போட்டிகளில் 319 ரன்களை 106.33 சராசரியில் அடித்திருந்தார். இதில் நான்கு அரைசதங்கள் அடக்கம். மேலும் அதிகப்பட்ச ரன் 77*.

Visits: 17

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *