சென்னை : ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி அவர்கள் பதில் அறிக்கை “ஒன்றிய உள்துறை அமைச்சரே ஒப்புக்கொண்டது போல, தொன்மையான தமிழ்மொழிக்கு சமஸ்கிருதத்துக்கு இணையாக நிதியுதவியும், இந்திக்கு இணையாக ஆட்சிமொழித் தகுதியும் அளித்திட வேண்டும்.
உள்துறை அமைச்சரே ஒப்புக் கொண்டிருப்பது போல், தொன்மை வாய்ந்த தமிழ் மொழிக்கு உரிய ஆட்சி மொழித் தகுதியை ஒன்றிய அரசு அலுவலகங்களில் அளித்திடவும் தேவையான முயற்சிகளை எடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
குறிப்பாகத் தமிழகத்தில் ஒன்றிய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கட்டாயத் தமிழ் பாடத்திட்டத்தை அமல்படுத்தவும், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக காலியாக உள்ள தமிழ்ப் பேராசிரியர் பணியிடங்களை உடனே நிரப்பித் தர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.”
Hits: 7