சென்னை : இளையபாரதம் என்ற யூடியூப் சேனலை பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத் நடத்தி வருகிறார். இவர் பெரம்பலூர் சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள மதுரகாளியம்மன் கோயில் பெயரில் நன்கொடை வசூல் செய்து மோசடி செய்ததாக ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் வழக்கு பதியப்பட்டது. பாஜக அமித்ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்வது வழக்கம்.
மதுரகாளியம்மன் கோயிலை சீரமைக்க என்ற பெயரில் கிரவுட் பண்டிங் முறையில் ரூ.34 லட்சம் வசூல் செய்து மோசடி செய்ததாக கோயில் செயல் அலுவலர் அரவிந்தன் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். வழக்கை பதிவு செய்த ஆவடி போலீசார் கார்த்திக் கோபிநாத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
ஜாமினில் வெளிவந்த அவர் நீதிமன்றத்தில் மனு ஓன்று அளித்துள்ளார். அதில் கோயில் பெயரில் வசூலித்த ரூ.30.77 லட்சத்தை கோயிலுக்கே கொடுத்துவிடுவதாக கூறியுள்ளார்.
Hits: 10