Wed. May 29th, 2024

மதுரை: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி “மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள அழகுசிறை கிராமத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பட்டாசு ஆலையின் வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

பட்டாசு ஆலையின் பாதுகாப்பு விஷயத்தில் தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுப்பதன் மூலமே இதுபோன்ற விபத்துக்களைத் தடுக்கமுடியும். காயமடைந்து உயிருக்கு போராடி வருபவர்களைக் காப்பாற்ற தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் உயர்தர சிகிச்சையும் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்யவேண்டும். விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்கவேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”

Views: 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *