Wed. Feb 28th, 2024

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கிராமம் அழகுசிறை. இந்த கிராமத்தில் வெள்ளையப்பன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இன்று ஆலையில் பணி நடைபெற்று கொண்டிருக்கும்போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அங்கிருந்த 3 கட்டிடங்களும் தரைமட்டமாகின. மேலும் வல்லரசு, அம்மாசி, கோபி, விக்கி, பிரேமா ஆகிய 5 பேரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

வட்டாச்சியர், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Visits: 19

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *