Thu. Apr 25th, 2024

நடைபெற்றுவரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை எடுத்து. அந்த அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 53 (35) ரன்களும், கேன் வில்லியம்சன் 46 (42) ரன்களும் எடுத்தனர்.

153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக முஹம்மத் ரிஸ்வான் 57 (43) ரன்களும், பாபர் அசாம் 53 (42) ரன்களும் எடுத்தனர்.

பாகிஸ்தான் அணி மூன்றாவது தடவையாக பைனலுக்கு முன்னேறியுள்ளது.

Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *