Thu. Apr 25th, 2024

சென்னை : தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியலமைப்பு சட்டத் திருத்தம் கடந்த 2019-ல், நாடாளுமன்றத்தில் அவசர,அவசரமாக நிறைவேற்றப்பட்டது. பின்னர் பல மாநிலங்களிலும் இந்த இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது.

பொருளாதார அடிப்படையில் மட்டும் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் இந்த சட்டத்திருத்தம் செல்லாது என அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, உயர்வகுப்பு ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்துள்ளது.

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு, வரலாற்று வகையில் ஒதுக்கப்பட்டவர்களுக்கு கிடைத்து வரும் சமூகநீதியை காலி செய்து விடும்.

ஆண்டாண்டு காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கிற பிற்படுத்தப்பட்ட,ஒடுக்கப்பட்ட, பழங்குடி மக்கள் தங்களுக்குரிய இட ஒதுக்கீட்டினைப் பெற்று கல்வியின் மூலமாகவும் வேலைவாய்ப்பின் மூலமாகவும் முன்னேற துடிக்கிறபோது அவர்களை மீண்டும் பழைய நிலைக்கே இழுத்துச் செல்லும் வகையில்,இத்தீர்ப்பு உள்ளது.”

Visits: 18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *