Thu. Dec 1st, 2022

சென்னை : தமிழ்நாட்டில் நடைபெறும் 10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

10 வகுப்புக்கு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 முதல் 20ம் தேதி வரை நடைபெறும். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். மேலும் 3,986 தேர்வு மையங்களில் நடைபெறும்.

11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 ம் தேதி வரை நடைபெறும்.

12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 4 ம் தேதி வரை நடைபெறும். தேர்வை 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ளனர்.

Hits: 7

Leave a Reply

Your email address will not be published.