Sun. Jun 23rd, 2024

நடைபெற்றுவரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் 39வது ஆட்டத்தில் சூப்பர் 12 குரூப் 1ல் இடம்பெற்ற இலங்கை அணியும் இங்கிலாந்து அணியும் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்து.இலங்கை தரப்பில் அதிகபட்சமாக பதம் நிசாங்கா 67 (45) ரன்கள் அடித்திருந்தார். இங்கிலாந்து அணியில் மார்க் வுட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஹேல்ஸ் 47 (30) ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 42 (36) ரன்களும் அடித்திருந்தனர்.

Views: 14

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *