மதுரை : நேற்று 04.11.2022 ந் தேதி மாலை செந்தமிழ்பாண்டியன் என்பவர் தனது மகளை கல்லூரியில் இருந்து வீட்டிற்கு அழைத்துவர கல்லூரி வாசலில் நின்றுகொண்டிருந்தபோது ஆம்புலன்ஸ் வாகனம் பிரேதத்துடன் வந்ததாகவும் அதன் முன்புறமும் பின்புறமும் டூவீலரில் வந்த நபர்கள் அதிக ஹாரன் சத்தம் எழுப்பியபடி வந்து கல்லூரி வாசலில் நின்றிருந்த மாணவிகளை பார்த்து அதிகமாக கூச்சலிட்டு அலப்பறை செய்ததாகவும் அதனை அவர் ஏன் இப்படி செய்கிறீர்கள் பார்த்து செல்லுங்கள் என்று கூறியதற்கு கூட்டத்தில் வந்த
1) சதீஷ்குமார் 19/22, த/பெ.சேது பாஸ்கரன், 3/84, பஜனைமடம் தெரு, அச்சம்பத்து, மதுரை மாவட்டம்
2) ராமமூர்த்தி 26/22, த/பெ. முருகன், 3/41, பஜனைமடம் தெரு, அச்சம்பத்து, மதுரை மாவட்டம்
3) நாகப்பிரியன் என்ற நவீன் 20/22, த/பெ. முத்துவேல், 3/107, பாலாஜி தெரு, அச்சம்பத்து, மதுரை மாவட்டம்
4) அஜித்குமார் 22/22, த/பெ. கண்ணன், 3/130, தேனி மெயின் ரோடு, அச்சம்பத்து, மதுரை மாவட்டம்
5) சோமசுந்தரம் 26/22, த/பெ. கேத்ராபாலு, 3/123, தேனி மெயின் ரோடு, அச்சம்பத்து, மதுரை மாவட்டம்
6) சிவஞானம் 23/22, த/பெ. கேத்ராபாலு, 3/123, தேனி மெயின் ரோடு, அச்சம்பத்து, மதுரை மாவட்டம்
ஆகிய ஆறு நபர்களும் கும்பலாக சேர்ந்து அவரை வழிமறித்து மரணத்தை உண்டு பண்ணும் விதமாக நிலைகுலையச் செய்யும்படி தாக்கியதால் அவர் தல்லாகுளம் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கும்படி புகார்கொடுத்து வழக்கு பதிவு செய்து ஆறு நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
Hits: 36