Wed. Mar 29th, 2023

ரியல்மீ நிறுவனம் பட்ஜெட் போன்களை புதிதாக வெளியிடுகிறது. ரியல்மீ சி33 போன் பட்ஜெட் விலையான ரூ.8,999/- மற்றும் ரூ.9,999/- இரண்டு விலைகளில் கிடைக்கிறது.

ரியல்மீ சி33 போன் 6.5 இன்ச் அகலம் கொண்டது. இந்த போன் ஆன்ட்ராய்டு 12 ஆப்ரேட்டிங் சிஸ்டம் உடன் வெளிவருகிறது. மொபைல் தடிமன் 8.3mm மேலும் இதன் எடை 187 கிராம்.

இந்த போனில் ப்ராசசராக unisoc T612 சிப் பொருத்தப்பட்டுள்ளது. இதன் AnTuTu பெஞ்ச்மார்க் ஸ்கோர் 221,253. பக்கவாட்டில் பிங்கர் ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த போனின் பின்புறம் 50MP கேமரா பொருத்தப்பட்டுள்ளது. முன்புற செல்பி கேமரா 5MP உள்ளது.

போனின் பேட்டரியானது 5000mAh உடன் வருகிறது. மேலும் மைக்ரோஸ்லாட் கார்டுடன் இரண்டு சிம் ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

3GB+32GB,4+64GB இரண்டு மாடல்கள் வெளிவந்து உள்ளது. Aqua Blue, Night Sea, SandyGold ஆகிய மூன்று வகையான கலர்களில் கிடைக்கிறது.

Hits: 8

Leave a Reply

Your email address will not be published.