குஜராத்: குஜராத்தில் நடந்த கேபிள் பால விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் தடயவியல் அறிக்கை ஓன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கேபிள் பாலமானது 235 மீட்டர் நீளம், 1.25 மீட்டர் அகலமும் கொண்டது. மேலும் இது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதாகும்.
அந்த அறிக்கையில் புதுப்பிப்பு பணியில் கேபிள் பாலத்தின் தரைப்பகுதி மட்டுமே மாற்றப்பட்டுள்ளதாகவும், பாலத்தை தாங்கும் கேபிள்கள் மாற்றப்படவில்லை என அதிர்ச்சியான செய்தி கூறப்பட்டுள்ளது. மேலும் தரைப்பகுதியில் 4 அலுமினிய தகடுகள் போட்டதும் விபத்திற்கு காரணம் நேற்றும் கூறப்பட்டுள்ளது.
கடிகார நிறுவனமான ஒரேவா நிறுவனத்திற்கு புதுப்பிக்கும் பணி கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கேபிள் பால விபத்து குறித்து நடந்த விசாரணையில் ஒரேவா நிறுவனம் ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடியில் ரூ.12 லட்சம் மட்டும் செலவு பண்ணியது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Hits: 8