Wed. May 29th, 2024

வது ஆட்டத்தில் சூப்பர் 12 க்ரூப் 1 ல் இடம்பெற்ற ஆஸ்திரேலியா அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 54 (32) ரன்களும், மிட்செல் மார்ஷ் 45 (30) ரன்களும் எடுத்தனர்.ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன்-உல்-ஹக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் கடைசி கட்ட ஓவர்களில் ஆஸ்திரேலியா அணிக்கு கிலி கொடுத்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்து மயிரிழையில் தோல்வியை தழுவியது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரஷித் கான் 48 (23) ரன்கள் எடுத்திருந்தார்.

ஆஸ்திரேலியா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Views: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *