Wed. Feb 28th, 2024

நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் 36 வது ஆட்டத்தில் சூப்பர் 12 க்ரூப் 2 ல் இடம்பெற்ற தென்னாப்பிரிக்கா அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக இஃப்திகார் அஹ்மத் 51 (35) ரன்களும், ஷதாப்கான் 52 (22) ரன்களும் எடுத்தனர்.

186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியில் மழை குறுக்கிட்டதால் 14 ஓவர்களில் 142 ரன்கள் எடுக்க இலக்கு நிர்ணியிக்கப்பட்டது. பவுமா தவிர அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். தென்னாப்பிரிக்கா அணியால் 14 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

பாகிஸ்தான் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Visits: 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *