Tue. Apr 23rd, 2024

நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் 37 வது ஆட்டத்தில் சூப்பர் 12 க்ரூப் 1 ல் இடம்பெற்ற நியூசிலாந்து அணியும் அயர்லாந்து அணியும் மோதின. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 61 (35) ரன்களும், பின் ஆலன் 32 (18) ரன்களும் எடுத்தனர்.

186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

நியூசிலாந்து அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Visits: 14

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *