Thu. Mar 28th, 2024

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி. இன்று நடந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 ஆட்டத்தில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இன்று நடந்த போட்டியில் விராத் கோஹ்லி 64 (44) ரன்கள் எடுத்திருந்தார். ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிகளில் (1065) அதிக ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.

விராத் கோஹ்லி இன்று நடந்த போட்டியையும் சேர்த்து மொத்தம் 1,065 ரன்கள் எடுத்துள்ளார். மொத்தம் 1,065 ரன்களை 25 போட்டிகளில் 23 இன்னிங்சில் 88.75 சராசரியில் 13 அரைசதங்களும் அடக்கம். மேலும் இவரது அதிகபட்ச ரன் 89*.

ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த மஹேலா ஜெயவர்த்தேனேவை (1,016) பின் தள்ளியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த கிறிஸ் கெயில் 965 ரன்களும், இந்தியாவை சேர்ந்த ரோஹித் சர்மா 921 ரன்களும், இலங்கையை சேர்ந்த திலகரத்னே தில்சன் 897 ரன்களும் எடுத்து அதிமுக ரன் குவித்தவர்கள் பட்டியலில் உள்ளனர்.

Visits: 13

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *