Thu. Dec 1st, 2022

நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் 34 வது ஆட்டத்தில் சூப்பர் 12 க்ரூப் 2 ல் இடம்பெற்ற நெதர்லாந்து அணியும் ஜிம்பாப்வே அணியும் மோதின. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்கள் சொதப்ப அவர்கள் பின்வந்த சீன் வில்லியம்ஸ், ராசா ஜோடி சிறப்பாக விளையாடியது. சீன் வில்லியம்ஸ் 28 (23) ரன்களிலும், ராசா 40 (24) ரன்களிலும் அவுட் ஆகினர். அவர்கள் பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக 19.2 ஒவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து தரப்பில் வான் மீகெரன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணியில் மேக்ஸ் ஓ’டவுட், டாம் கூப்பர் ஜோடி சிறப்பாக விளையாடியது. மேக்ஸ் ஓ’டவுட் 52 (40) ரன்களிலும், டாம் கூப்பர் 32 (59) ரன்களிலும் அவுட் ஆகினர். நெதர்லாந்து அணி 18 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Hits: 6

Leave a Reply

Your email address will not be published.