Wed. Feb 28th, 2024

நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் 35 வது ஆட்டத்தில் சூப்பர் 12 க்ரூப் 2 ல் இடம்பெற்ற இந்தியா அணியும் பங்களாதேஷ் அணியும் மோதின. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல் அதிரடியாக விளையாடி 50 ரன்களில் அவுட் ஆனார்.ரோஹித் சர்மா 2 ரன்களில் அவுட் ஆகி சொதப்ப அவர்கள் பின்வந்த விராத் கோஹ்லி , சூர்யகுமார்யாதவ் ஜோடி சிறப்பாக விளையாடியது. சூர்யகுமார்யாதவ் 30 (16) ரன்களில் அவுட் ஆகினார். கடைசிவரை கோஹ்லி 64 (44) அவுட் ஆகாமல் விளையாடினார். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்தது. பங்களாதேஷ் தரப்பில் ஹசன் மஹ்மூத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணியில் லிட்டன் தாஸ் தவிர அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். மழை பெய்த காரணத்தினால் ஆட்டம் 16 ஓவரில் 151 எடுத்தால் வெற்றி என்று இலக்கு மாற்றப்பட்டது. பங்களாதேஷ் அணியால் 16 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

Visits: 12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *