Tue. Apr 23rd, 2024

நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் 33 வது ஆட்டத்தில் சூப்பர் 12 க்ரூப் 1 ல் இடம்பெற்ற இங்கிலாந்து அணியும் நியூசிலாந்து அணியும் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர், ஹேல்ஸ் ஜோடி சிறப்பாக விளையாடியது. ஜோஸ் பட்லர் 73 (47) ரன்களிலும், ஹேல்ஸ் 52 (40) ரன்களிலும் .அவுட் ஆகினர். வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக 20 ஒவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் பெர்குசன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் சொதப்ப பின் வந்த கேன்வில்லியம்சன், க்ளென் பிலிப்ஸ் ஜோடி சிறப்பாக விளையாடியது. கேன் வில்லியம்சன் 40 (40) ரன்களிலும், க்ளென் பிலிப்ஸ் 62 (36) ரன்களிலும் அவுட் ஆகினர். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்து 20 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இங்கிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Visits: 11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *