Wed. Feb 28th, 2024

நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் 31 வது ஆட்டத்தில் சூப்பர் 12 க்ரூப் 1 ல் இடம்பெற்ற அயர்லாந்து அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதின. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஒவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஆரோன் பின்ச் 63 (44), மார்கஸ் ஸ்டோனிஸ் 35 (25) ரன்கள் எடுத்தனர். அயர்லாந்து அணி சார்பில் பெர்ரி மெக்கர்த்தி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார் .

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணியின் லார்கண் டக்கர் தவிர மற்ற அனைவரும் ஆஸ்திரேலியா அணியின் துல்லியமான பந்துவீச்சில் அவுட் ஆகினர். 18.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் எடுத்து 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஆஸ்திரேலியா அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *