Tue. Apr 23rd, 2024

நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் 27 வது ஆட்டத்தில் சூப்பர் 12 க்ரூப் 1 ல் இடம்பெற்ற நியூசிலாந்து அணியும் இலங்கை அணியும் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் க்ளென் பிளிப்ஸ் சதத்தால் 20 ஒவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது.

168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்கள் மட்டுமே எடுத்து 65 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. நியூசிலாந்து அணியில் ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

நியூசிலாந்து அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Visits: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *