Wed. Feb 28th, 2024

நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் 24 வது ஆட்டத்தில் சூப்பர் 12 க்ரூப் 2 ல் இடம்பெற்ற பாகிஸ்தான் அணியும் ஜிம்பாப்வே அணியும் மோதின. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஒவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 31 (28) ரன்கள் எடுத்தார்.

131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஜிம்பாப்வே அணி 1 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Visits: 14

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *